கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் புதிய கட்டிடம் திறந்து வைப்பு

15th February 2018

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நீண்ட காலமாக தேவை ஏற்பட்டிருந்த தையல்கடை, சலூன் மற்றும் சப்பாத்து தைக்கும் தேவைகளின் நிமித்தம் புதிய கட்டிடம் ஒன்று கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் நிர்மானிக்கப்பட்டு (14) ஆம் திகதி புதன் கிழமை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியின் பணிப்புரைக்கமைய இராணுவ பொறியியலாளர் படையினரால் இந்த கட்டிடங்கள் நிர்மானிக்கப்பட்டது.

இந்த கட்டிடம் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவனையினால் ரிபன் வெட்டி திறந்து வைத்து பின்னர் கேர்ணல் நிஷாந்த திசாநாயக்கவினால் மங்கள விளக்கேற்றி சமய ஆசீர்வாத நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்த கட்டிட நிர்மானிப்பு தொடர்பாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி படையினரை பாராட்டினார். மேலும் மரநடுகை நிகழ்வும் படைத் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றது.

|