யாழ் படையினருக்கு உடல்திடகாத்ரம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான கருத்தரங்கு

14th February 2018

யாழ் பாதுகாப்பு படைத்தலைமையத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் அழைப்பையேற்று வருகை தந்த புகழ்பெற்ற அமெரிக்க உணவு நிபுணரினால் உடல்திடகாத்ரம் மற்றும் போசனை தொடர்பான செயலமர்வு (12) ஆம் திகதி திங்கட்கிழமை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அமெரிக்கப் பயிற்சியாளர் மற்றும் சத்துணவு நிபுணர் திருமதி டிப்பனி பட்சாகிஸ் அவர்களினால் இராணுவத்தினருக்கு உடல் திடகாத்ரம் மற்றும் ஊட்டச்சத்து உணவு வகைகள் தொடர்பான கருத்துக்கள் இந்த செயலமர்வின் போது இராணுவத்தினருக்கு விரிவுரைகள் வழங்கப்பட்டன.

இந்த செயலமர்வில் யாழ் பாதுகாப்பு படைத்தலைமையத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின கீழ் கடமை புரியும் 250 இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

|