3 ஆவது மகளிர் படையணியினரால் பொலனறுவை முதியோர் மற்றும் சிறுவர் இல்லத்திற்கு உணவு வழங்கும் நிகழ்வு

10th February 2018

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனன்வல அவர்களின பணிப்புரைக்கு அமையகிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 3ஆவது மகளிர் படையணியின் அதிகாரிகள் மற்றும் மகளிர் படையினரால் பொலனறுவை புலத்திசிபுர பெரகும் இல்லத்தில் இரவு உணவும்>இசைநிகழ்ச்சிமேற்கொள்ளும் நிகழ்வும் கடந்த புதன் கிழமையன்று இடம்பெற்றது.

3ஆவது மகளிர் படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் சமரி விஜேதிலக அவர்களின் ஆலோசனைக்கு அமைய தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இராணுவ களிப்ஸ்ஸோ பேண்ட் வாத்தியமும்நடனமும் இடம்பெற்றது.

இல்லத்தின் முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு உணுவ வழங்கி அவர்களை மகிழ்விப்பதுக்கு அவர்கள் முன்னிலையில் நடனமும் பாட்டு கச்சேரியும் நடைப்பெற்றது.

பொலனறுவை தம்மன்கொட்டுவ நவநாகரய வித்திலோக விகாரையின் விகாராதிபதி தெமுனுனாவி உபரத்ன தேரர் மற்றும் கதுருவலை தம்மபால தேரர் வடமத்திய மகாணத்தின கதுருவல ஜயந்தி விகாரையின் சங்க நாயக தேரர் மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனன்வல அவர்கள்திரு.எ.எம்.பத்ம கங்கொடதென்ன கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாக குழுவின் கேர்ணல் சானக வேரகொட சிவில் சேவை அதிகாரியான லெப்டினென் கேர்ணல் திலக் ரணசிங்க அவர்களும் படையினரும் கலந்து கொண்டன.

|