சுதந்திர தினத்தை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு

9th February 2018

70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 51ஆவது படைப்பிரிவின்படையினர், பொதுமக்கள் மற்றும் பல நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மரக்கன்று நடும் பணிகளை மேற்கொண்டனர்.

யாழ் 51ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ் 51ஆவது படைப்பிரிவினரால் யாழ்ப்பாண நகர்புற பிரதேசத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம் பெற்றது.

இந்த நிகழ்வானது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் 1000 மரங்களும் மூலிகை மற்றும் பொருளாதாரத்துக்கு பலன் பெறும் 50 விலாமரம்,100 பனைமரங்கள்,மூலிகை மரங்களும்போன்றவையும் நடப்பட்டன. அதன்படி 512 ஆவது படைப்பிரிவின் படையினர்களால் சென்மினி சந்தி தொடக்கம் 313 கிலோமீற்றர் துாரம் வரை உள்ள ஏ 9 வீதிக்கும் இடையே இருபுறமும் 100 மதிப்புள்ள பனை மரங்கள் நடப்பட்ன.

|