சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் 51ஆவது படையினரின் தலைமையில் சமூக சேவைப் பணிகள் முன்னெடுப்பு

8th February 2018

இலங்கையில் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 51ஆவது படையினரின் தலைமையில் சமூக சேவைப் பணிகள் (பெப்ரவரி 4) இடம் பெற்றது.

அந்த வகையில் 51ஆவது படைப் பிரிவின் சில படையினர் 10 பொது இடங்களான கோவில் வைத்தியசாலை பாடசாலை கடற் கரை மற்றும் பல பொது இடங்களில் சிரமதானப் பணிகளை மேற்கொண்டனர்.

அந்த வகையில் இப் பணிகள் 51ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்தின அவர்களின் தலைமையில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களின் வழிகாட்டலின் கீழ் 511 512 513 மற்றும் 515 படைப் பிரிவினரின் பங்களிப்புடன் இடம் பெற்றது.

இப் பணிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் சிரமதானப் பணிகளை மேற்கொண்;டதுடன் சென் மேரிஸ் ஆலயம் உராலு கணேஷ் வித்தியாலயம் கோப்பாய் வைத்தியசாலை மாணிப்பாய் போதனா வைத்தியசாலை பிள்ளையார் கோயில் தம்பிலாய் அடிப்படை வைத்தியசாலை யாழ் போதான வைத்தியசாலை காரைநகர் வைத்தியசாலை மற்றும் இலவச உணவுகள் போன்றன கதுறுகொடை விகாரையின் விகாராதிபதிகளுக்கு வழங்கப்பட்டது.

அன்றய தினமே 51ஆவது படைப் பிரிவினர் சுதந்திர தினத்தை முன்னிட்டு கீரிமலை மற்றும் மாதக்கல் போன்ற பிரதேசங்களில் சுத்திகரிப்பு பணிகளையும் மேற்கொண்டனர்.

|