22ஆவது படைப் பிரிவினால் திருகோணமலையில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

8th February 2018

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருகோணமலை 22ஆவது ஆவது படைப் பிரிவின் கண்காணிப்பின் கீழ் முப்படையின் 150 படையினர் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பங்களிப்புடன் திருகோணமலை கோட்டையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (4) இடம் பெற்றது.

இதன் போது இராணுவப் படையினரின் அணிவகுப்பு நிகழ்வூகள் இடம் பெற்றதுடன் தேசியக் கொடியானது சம்பிரதாய பூர்வாமாக எடுத்துச் செல்லப்பட்டதுடன் பல கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.

இதன் போது திருகோணமலை மாவட்ட செயலாளரான திரு என் ஏ ஏ புஸ்பகுமார மற்றும் அதிகாரிகள் இராணுவத்தினருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

இந் நிகழ்வில் மத குருமார்கள் கிழக்கு மாகான சபைச் செயலாளர் டீ எம் எஸ் அபேகுணவர்தன திருகோணமலை மாவட்ட செயலாளர் என் ஏ ஏ புஸ்பகுமார 22ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர கிழக்கு மாகான பிரதி பொலிஸ் மா அதிபரான கபில ஜயசேகர 221ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் கே பீ எஸ் பிரேமலால் திருகோணமலை பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேரா முப்படைகளின் உயர் அதிகாரிகள் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

|