யாழ் மகளிர்ப் படையினரால் வறிய குடும்பங்களிற்கு உதவிகள்

8th February 2018

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் இலங்கை இராணுவத்தின் 7ஆவது மகளிர்ப் படையணியினரால் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கான நலன்புரித் திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அந்த வகையில் இக் குடும்பங்களின் தாய்மார்களுக்கென பால்மா பக்கற்றுகள் போன்றன அரியாலே பிரதேசத்தில் சர்வோதய கேட்போர் கூடத்தில் வைத்து பகிர்ந்தளிக்கப்பட்டது.

அந்த வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 35 வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கான பால்மா பக்கற்றுகளை 7ஆவது மகளிர்ப் படையணியின் அதிகாரிகள் வழங்கி வைத்துள்ளனர்.

இந் நிகழ்வானது யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்றது.

மேலும் இந் நிகழ்வில் 7ஆவது மகளிர்ப் படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் சமன்மலி ரண்கொதகே உயர் அதிகாரிகள் மகளிர்ப் படையினர் மற்றும் குடும்பங்களின் உறுப்பினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

|