நிதி கணக்கியல் பணிப்பாளர் ஜெனரல் இனால் விழிப்புணர்வூ நிகழ்சிகள் முன்னெடுப்பு
7th February 2018
அரச டெண்டர் நடைமுறைகள் தொடர்பாக இராணுவ பதவிநிலைப்ப பிரதானியான மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ அவர்களின் வழிகாட்டலின் கீழ் நிதி கணக்கியல் பணிப்பாளர் ஜெனரல் ஆன மேஜர் ஜெனரல் வஜிர பாலிக்கர அவர்களின் தலைமையில் 2018ஆம் ஆண்டு ஜனவரி 18-19ஆம் திகதிகளில் பனாகொடையில் உள்ள இலங்கை ஜெனரல் சேவைப் படைத் தலைமைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இக் கருத்தரங்கானது இராணுவத் தலைமையகத்தின் உள்த்துரை தணிக்கையாளரான பிரிகேடியர் எம் எஸ் சி பெரேரா மற்றும் தலைமை உள்ளக கணக்காய்வாளர் திரு எம் எஸ் அனுருத்த அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
அந்த வகையில் இக் கருத்தரங்கின் நோக்கானது அரச டென்டர் தொடர்பான விழிப்புணர்வூ இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினருக்கு ஏற்படுத்தும் நோக்கில் இடம் பெற்றதுடன் இராணுவத் தலைமையகத்திலிருந்த படையினரும் கலந்து கொண்டதுடன் 2006ஆம் ஆண்டிலிருந்து (நல்லது மற்றும் தொழில்) மேற்கொள்ளப்படும் விடயத்திற்கு அமைவாக இடம் பெற்றது.
இக் கருத்தரங்கில் 108 அதிகாரிகள் மற்றும் 133 படையினர் போன்றௌர் கலந்து கொண்டதுடன் இவை மிகவூம் முக்கியமானதோர் கருத்தரங்காகக் காணப்பட்டது.
|