மாதுறுஓயா இராணுவ பயிற்றுவிப்பு மையத்தினால் சுதந்திரதின நிகழ்வுகள்
6th February 2018
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாதுறுஓயா இராணுவ பயிற்றுவிப்பு மையத்தின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஜயந்த செனெவிரத்தின அவர்களின் தலைமையில் மர நடுகையானது கடந்த ஞாயிற்றுக் கிழமை (4) இடம் பெற்றது.
அத்துடன் இந் நிகழ்வின் போது அனைத்து அதிகாரிகளும் படையினரும் கும்புக் மற்றும் களுவர போன்ற மரக் கன்றுகளை நட்டனர்.
இந் நிகழ்வில் முதல் அம்சமாக இப் படையின் கட்டளை அதிகாரியவர்களால் தேசியக் கொடி உயர்தப்பட்டதுடன் நாட்டிற்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் பொருட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அதே வேளை கொழுப்பு கோல் பேசில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளை தொலைக் காட்சியின் மூலம் படையினருக்கு பார்வையிடுவதற்கான ஒழுங்குகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மாதுறுஓயா இராணுவ பயிற்றுவிப்பு மையத்தினால் கந்தேகம வித்தியாலய மாணவர்கள் மாவட்ட ரீதியிலான விளையாட்டுத் திறமைகளை வெளிக்காட்டியதற்கான பாடசாலை உபகரணங்களும் இவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
|