இலங்கை பொறியியலாளபர்ப் படையணியின் புதிய கேர்ணல் கெமடாண்ட் பதவியேற்பு

1st February 2018

இலங்கை பொறியியலாளபர்ப் படையணியின் 13 கேர்ணல் கெமடாண்ட் ஆக மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியவர்கள் பனாகொடை இராணுவத் தலைமையகத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை (30) பதவியேற்றார்.

இவர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களின் பதவிக்கு அமர்த்தப்பட்டார்.

இவ்வாறு பதவியேற்ற இலங்கை பொறியியலாளபர்ப் படையணியின புதிய கேர்ணல் கெமடாண்ட் அவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு சென்டர் கெமடாண்ட் ஆண கேர்ணல் லங்கா அமரபால அவர்களால் வரவேற்கப்பட்டார்.

அத்துடன் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியவர்கள் யாழ் பாதுகாப்ப படைத் தளபதியாக காணப்பட்டதுடன் பௌத்த மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக அவர் தமது அதிகார பூர்வ கையொப்பத்தையிட்டு கடமைப் பொறுப்பேற்றார்.

மேலும் இப் புதிய கேர்ணல் கெமடாண்ட் அவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் இவர் அனைத்து படைத் தலைமையகங்களினதும் கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினருடனான கலந்துரையாடலையூம் மேற்கொண்டார்.

|