மத்திய இராணுவ படையினரால் போதி பூஜை பிங்கம நிகழ்வுகள்
1st February 2018
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஊனமுற்ற படையினரின் நலன் கருதி விஷேட போதி பூஜை பிங்கம போன்ற பௌத்த மத வழிபாடுகள் (31) ஆம் திகதி வியாழக் கிழமை ஏற்பாடு செய்தன.
இப் பூஜையானது தியத்தலாவ விகாரகெளை விகாரையில் வசித்து வரும் சியம்பலாஆண்டுவ ஹேமலோக்க தேரர் அவர்களினால் விஷேட பூஜையூம் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்துக்கு அருகில் உள்ள போதி கந்த மாலுவ விகாரையில் பௌத்த மத வழிப்பாடுகளும் இடம் பெற்றது.
இப் பூஜைகளில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இப் பூஜையில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ் இராணுவ அதிகாரிகள்இ இராணுவ படையினர் மற்றும் சிவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வ பயிற்ச்சி பாடசாலையின் படையினரும் கலந்து கொண்டார்கள்.
இப் பூஜையை நடத்திய பௌத்த மத தேரருக்கு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் அட்டபிரிகரயும் படையினரால் வழங்கப்பட்டது.
|