கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் இராணுவ வீரர்களுக்கு சொகுசு பஸ் சேவை

30th January 2018

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் இராணுவ வீரர்களின் நலன் கருதி கொழும்பு தொடக்கம் கிளிநொச்சி வரையிலான சொகுசு பஸ் சேவை கடந்த சனிக்கிழமை (27) ஆம் திகதி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவண அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நலன்புரி சேவையானது தனியார் பஸ் நிறுவனத்துடனான ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டதுடன் இராணுவ வீரர்களின் விடுமுறை செல்கையில் எதுவித சிரம்மும் இன்றி வசதியா பயணம் செல்வதற்காக இந்த பஸ்சவைகள் கிளிநெச்சியில் பரந்தன் சந்தியில் இருந்து பிரயாணத்தை ஆரம்பித்து கொழும்பு வரை செல்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.

ஒவ்வொரு பயணத்திலும் இரண்டு திரைப்படங்கள் படங்கள் ஒளிபரப்பப்படும். ஒவ்வொரு பயணத்திலும் வவுனியா, அனுராதபுரம், வாரியபொல, குருநாகல் மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் ஊடக பயணமாகின்றது. இலவச Wi-Fi வசதிகள் மற்றும் அனுசரிப்பு இடங்கள் ஆகியவற்றிற்கு பேருந்துகள் நிறுத்தப்பகின்றது குறிப்பட தக்கவை.

|