படையினரால் கோவில் வளாக சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபாடு

27th January 2018

கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 573ஆவது படைப் பிரிவின் 6ஆவது இலங்கை தேசிய படையணியினரால் மாயவனுhர் கண்ணன் கோயில் வளாகம் கடந்த சனிக் கிழமை (20) சுத்திகரிக்கப்பட்டது.

அந்த வகையில் 57ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 573ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் ஜானக ரணசிங்க அவர்களின் கண்காணிப்பின் கீழ் இச் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இச் சிரமதானப் பணிகளில் 4இராணுவ அதிகாரிகள் மற்றும் 40 படையினர் கலந்து கொண்டனர்.

|