இராணுவத்திடம் விளையாட்டு தொடர்பான அறிவை பெற்றுக்கொண்ட வடக்கு விளையாட்டுவீரர்கள்
27th January 2018
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த 94 விளையாட்டு வீரர்களுக்கு, சமீபத்தில் கிளிநொச்சியில் அமைந்துள்ள 'நெலும்பியச ’கேட்போர் கூடத்தில் செயலமர்வு இடம்பெற்றது.
மேலும் 9ஆவது சமிக்ஞை படையணியின் விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுகள் தொடர்பான ஒத்திகைகள் இடம்பெற்றன.
இந்த செயலமர்வுகளை 57ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் பணிப்புரைக்கு அமைய 573ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான கேர்ணல் ஜானக ரணசிங்க அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றன.
57 பிரிவின் கீழ் இயங்கும் படைத் தலைமையங்கள் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் உறுப்பினர்கள் மற்றும் இராணுவ கயிறு இழுக்கும் குழுவினர்கள் ஒன்றினைந்து வெவ்வேறு விதமான எண்ணக்கருத்துக்களையும் விளையாட்டு சம்மந்தமான விதிமுறைகளையும் விரிவு படுத்தினர்.
இலங்கை கயிறு இழுக்கும் விளையாட்டு கழகத்தின் தலைவர் கேர்ணல் ஜாணக ரணசிங்க இலங்கை கயிறு இழுக்கும் விளையாட்டு கழகத்தின் செயலாளர் திரு. கிஸ்டி பெர்னாண்டோ மற்றும் விளையாட்டு அறிவியல் தேசிய நிறுவனத்தின் பணிப்பாளர் சஜித் ஜயலால் அவர்களினால் விரிவுரைகளும் வழங்கப்பட்டதை தொடர்ந்து கயிறு இழுக்கும் புதிய விதி ஒழுங்குமுறைகள், சர்வதேச முக்கியத்துவம் தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச முக்கியத்துவம் சம்மந்தமான கருத்துக்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் பிரதான விருந்தினராக 57ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர்களிடையே நல்லெண்ணம்> நல்லிணக்கம் மற்றும் இணக்கத்தை ஊக்குவிப்பதாற்காக ஒழுங்கமைக்கப்பட்டது.
|