ஓய்வு பெறும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதிக்கு இராணுவ மரியாதைகள்
26th January 2018
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியாக கடமை வகித்து ஓய்வுபெறவிருக்கும் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களுக்கு (24) ஆம் திகதி பனாகொட இராணுவ முகாமில் அணிவகுப்பு மரியாதைகள் இடம்பெற்றன.
அணிவகுப்பு நிமித்தம் வருகை தந்த மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியை மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரியான பிரிகேடியர் ஜீனேநந்த தந்திரிவத்த அவர்கள் வரவேற்று இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.
பின்பு மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி படைத் தலைமையகத்தில் இருக்கும் படையினர் மத்தியில் உறையாற்றும்போது தான் இந்த படைத் தலைமையகத்தில் கடமை புரிந்த காலத்தில் இராணுவத்தினரால் வழங்கிய சேவையை பாராட்டினார்.
இறுதியில படைத் தளபதி படைத் தலைமையகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு படையினருடன் உறையாடி புகைப்பட காட்சியிலும் இணைந்திருந்தார்.
|