துங்கம பொறியியலாளர் பயிற்சி பாடசாலையில் புதிய தொழில் பயிற்சி மையம்

24th January 2018

எம்பிலிபிடிய துனுக்கமையில் அமைந்துள்ள இராணுவ பொறியியலாளர் பயிற்சி முகாமில் புதியதொழில் பயிற்சி மையம் (22) ஆம் திகதி திங்கட் கிழமை திறந்து வைக்கப்பட்டது.

பொறியியலாளர் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் வருண கமகே அவர்களினால் விடுத்த அழைப்பையேற்று இந்த நிகழ்விற்கு மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்தார்.

அவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்பு இந்த அதிகாரியினால் இந்த பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த பயிற்சி நிலையம் பொறியியலாளர் படைப் பிரிவின் கட்டளை தளபதியான பிரிகேடியர் அமித் செனெவிரத்ன அவர்களது ஆலோசனைக்கமைய , மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களது வழிக்காட்டலின் கீழ் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது ஆசிர்வாதத்துடன் திறந்து வைக்கப்பட்டது.

இந்த பயிற்சி மைய திறப்பு விழாவின் பின்பு இந்த பயிற்சி தொடர்பான கலந்துரையாடல் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளது பங்களிப்புடன் இடம்பெற்றது.

.

தொழில்சார் பயிற்சி அதிகார சபையின் பங்கேற்பாளர்கள் இராணுவத்தின் முழுமையான இந்த பயிற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்தனர். மேலும் சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட NVQ சான்றிதழைப் பயிற்சி பெறுபவர்களுக்கு வழங்கி வைப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த பயிற்சி திட்டத்தின் கீழ், அனைத்து இராணுவ பொறியியலாளர்களும் பல்வேறு வகையான முன்னேற்றங்களை அடைய முடியும்.

இதற்கிடையில், இலங்கை தொழில்சார் அதிகாரசபையினால் நடத்தப்பட்ட நிர்மாண கைத்தொழில் அபிவிருத்திப் பயிற்சி பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த 96 இராணுவ வீரர்களுக்கு தேசிய தொழிற்பாட்டு தகுதி - நிலை 2 மற்றும் 3 (NVQ-Level 2 & 3) சான்றிதழ் இந்த நிகழ்வின் போது வழங்கப்பட்டது.

|