யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் ஜனஹந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு

22nd January 2018

யாழ் பாதுகாப்பு படையினர் லண்டணில் உள்ள ஜனஹந்த திட்டத்தின் ஒருங்கிணைப்போடு வறிய குடும்பங்களின் பாடசாலை செல்லும் 50 மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள் வழங்கும் நோக்கில் அவர்களது கல்வி மேம்பாட்டு திட்டங்கள் வளாகத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை (21) மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் இவ் 50 மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள் வழங்கும் திட்டமானது லண்டணில் உள்ள ஜனஹந்த திட்டத்தின் அனுசரனையோடு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப் பாதுகாப்பு படைத் தலைமையக அரங்கில் இடம் பெற்றது.

அந்த வகையில் ஒவ்வொறு மாணவர்களுக்கம் தலா 5000 ருபா வீதம் 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இப் புலமைப் பரிசில் திட்டங்கள் யாழ் மாகானத்தின் 50 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற் கிணங்க இப் புலமைப் பரிசில் திட்டத்தின் தலைவரான திரு ஸ்ரீ லால் டயஸ் அவர்களால் இத் திட்டத்திற்கான அனுசரனை வழங்கப்பட்டது.

சமூகத்தினரிடையே சமாதானத்தையூம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் வட மாகானத்தின் வறிய குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை செல்லும் மாணவர்களுக்காக இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையில் ஓமான் லங்காவின் பணிப்பாளர் திரு மோஹன் பீபல்ஜ் கெயார் லங்காபின் பணிப்பாளரான திருமதி வதனி சங்கர் போன்றோரால் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கு தலா 3500 வீதம் மாதாந்தம் வழங்கப்பட்டது.

முன்னர் இக் குழுவினர் புங்குடுத் தீவு மஹா வித்தியாலயத்தின் 10 புலமைப் பரிசில்களை நடிகை திருமதி சுனிதா வீரசிங்க மற்றும் களனிப் பல்கலைக் கழகத்தின் மேலதிக விரிவூரையாளரான திரு நந்தலால் மலாகொடை அவர்களின் அனுசரனையோடு வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் இராணுவ அதிகாரிகள் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் போன்றோர் கலந்து கொண்டனர்.

|