கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் தைப்பொங்கல் நிகழ்வுகள்
22nd January 2018
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 231 ஆவது படைப் பிரிவு இணைந்து மட்டக்களப்பு மாமாங்கம் பிள்ளையார் கோயிலில் தைப்பொங்கல் நிகழ்வுகள் (14) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மிக சிறப்பாக நடாத்தினர்.
அப்பிரதேச வாழ் மக்களிடையே நல்ல சமாதான நல்லினக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்வுகள் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்துசித பனன்வலகே பணிப்புரைக்கமைய இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு தான நிகழ்வுகளும் இராணுவத்தின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த தைப்பொங்கல் விஷேட பூஜைகள் சவுந்தரம் நாயகம் குருக்களினால் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் தேசிய நிபந்தனை மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான தைப்பொங்கல் பெருவிழா (17) ஆம் திகதி மட்டக்களப்பு கொத்துகுளம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் வளாகத்தினுள் இடம்பெற்றது.
2 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதிகளில் மாமாங்கம் ஈஸ்வர கோவில் பழமை வாய்ந்த புராதான ஆலயமாகும். "ராமன்" சிவன் தனது பிரார்த்தனை செய்த இடமாக இந்த இடம் கருதப்படுகிறது.
|