நேபாள இராணுவ தளபதி முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 22 ஆவது படைப்பிரிவுக்கு விஜயம்

21st January 2018

இலங்கைக்கான விஜயத்தை மேற் கொண்ட நேபாள இராணுவ தளபதி ஜெனரால் ராஜேந்திர சேத்திரி அவர்கள் சனிக்கிழமை (20)ஆம் திகதி முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்துக்கு தமது விஜயத்தை மேற் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து நேபாள இராணுவ தளபதியவர்களுக்கு இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய இராணுவ பாதுகாப்பு அணிவகுப்பு மரியாதை 24ஆவது சிங்க படையணியினரால் வழங்கப்பட்டது.

முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் வரவேற்பிற்கு பின் முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு திட்டங்கள் போன்றவை சம்மந்தமாக இருவருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது.

இந் விஜயத்தின் நினைவாக முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி உட்பட அனைத்து இராணுவ அதிகாரிகளுடன் குழு புகைப்படத்திலும் கலந்து கொண்டதோடு விருந்தினர் புத்தகத்திலும் கையெப்பமிட்டார்.

இந்த வருகையின் நிமித்தம் நேபாள இராணுவ தளபதியவர்களுக்கு நினைவு சின்னமும் வழங்கப்பட்டது.

அதன் பின்னர், நேபாள இராணுவ தளபதி அவர்கள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் திருக்கோணமலை பிரதேசத்தில் அமைந்திருக்கும் 22ஆவது படைப்பிரிவிற்கு விஜயத்தை மேற் கொண்டு இப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர அவர்களை சந்தித்தார்.

நேபாள இராணுவ தளபதி அவர்களின் வருகையை முன்னிட்டு திருக்கோணமலை பிரதேசத்தின் 22ஆவது படைப்பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தில் படைப்பிரிவின் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

|