காரியளை நாகபடுவன் பாடசாலையில் வளாகத்தில் இராணுவத்தினரால் சிரமதான பணிகள்
21st January 2018
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 651ஆவது படைப்பிரிவின் 11ஆவது (தொண்டர்) கஜபா படையணியின் படையினர் கடந்த (17)ஆம் திகதி புதன் கிழமை பூனரின்>காரியளை நாகபடுவன் பிரதேசத்தின் அமைந்திருக்கும் நாகபடுவன் தமிழ் மிக்ஸ் பாடசாலையின் வளாகத்தில் சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.
பாடசாலை வளாகம் மற்றும் பாடசாலை கட்டிடங்களையும் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளுக்காக 11ஆவது (தொண்டர்) கஜபா படையணியின் சேவை புரியும் 30 இராணுவ வீரர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த சிரமதான பணியானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் ஆலோசனைக்கு அமைய 65ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சிரமதான பணிக்காக இராணுவ அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டார்கள்.
|