இரசாயன ,உயிரியல் , கதிரியக்க மற்றும் அனுசக்தி படையினரால் விஷவாயுக் கட்டுப்பாடு
20th January 2018
இலங்கை இராணுவ பொறியியலாளர்ப் படையணியின் 14ஆவது இரசாயன ,உயிரியல் , கதிரியக்க மற்றும் அனுசக்தி படையினரால் களனிப் பிரதேச வெவெல்டுவ பிரதேசத்தின் வீட்டு வளாகத்தில் காணப்பட்ட மண்ணில் நச்சு வாயூத் தாக்கம் உள்ளதாக இரசாயன தேசிய அதிகாரசபையினால் (NACWC) இராணுவத்தினருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க இராணுவத்தினர் உடனடியாக அப்பிரதேசத்திற்கு விரைந்து சென்றனர்.
அந்த வகையில் 14ஆவது இரசாயன , உயிரியல் , கதிரியக்க மற்றும் அனுசக்தி படையின் 17 இராணுவத்தினர் மேற்படி பிரதேசத்திற்கு வெள்ளிக் கிழமை (12) இரவு விரைந்து சென்றதுடன் அங்கு காணப்பட்ட மண்ணில் நச்சு வாயுவை விளைவிக்கும் அமோனிய அல்லது காபன் மொனொக்சைட் போன்ற இராசயனவியல் அமிலம் காணப்பட்டதை கண்டறிந்துள்ளனர்.
மேலும் இராணுவப் பொறியியலாளர்ப் படையினரால் பக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி இரசாயனவியல் தாக்கம் உள்ள மண் தோன்டியெடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அத்துடன் இரசாயன , உயிரியல் ,கதிரியக்க மற்றும் அனுசக்தி படையினரால் உயர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய நச்சு வாயுவான காபன் மொனொக்சைட வாயு காணப்படுவதை கண்டறிந்துள்ளனர்.
அந்த வகையில் இரசாயன , உயிரியல் ,கதிரியக்க மற்றும் அனுசக்தி படையணியின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் அமித் செனெவிரத்தின அவர்களின் வழிகாட்டலின் கீழ் 12ஆவது பொறியியலாளர்ப் படையனியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் டி டீ பி சிறிவர்தன அவர்களின் கண்காணிப்பின் கீழ் இந் நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
மேலும் நாட்டில் ஏற்படுகின்ற அவசரகால தேவைகளின் போது இராசாயவியல் தாக்கச் செயற்பாடுகளின் போதும் இவ் இரசாயன ,உயிரியல் , கதிரியக்க மற்றும் அனுசக்தி படையினர் மேற்கொண்டுள்ளதுடன் கடந்த வெள்ளிக் கிழமை (12) இரவு11.30 மணியளவில் இந் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் இரசாயன ,உயிரியல் , கதிரியக்க மற்றும் அனுசக்தி படையின் தீ அனைப்பு படையணி அதிகாரிகளும் இங்கு ஏற்றபட்ட சிறு புகைத் தோற்றம் காரணமாக வருகை தந்திருந்தனர்.
|