படையினரால் பாரம்பரிய ஆயுர்வேத மருந்து வகைகள் பகிர்ந்தளிப்பு

19th January 2018

யாழ் வாழ் மக்களது பாரம்பரிய மருத்துவம் (ஆயுர்வேத மருந்துவம்) தொடர்பான அதீத தேவையின் காரணமாக யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 52ஆவது படைப் பிரிவின்; 523ஆவது படைப் பிரிவின் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக ஆயுர்வேத மருத்துவத் திணைக்களத்தின் ஒருங்கிணைப்போடு ஆயுர்வேத மருத்துவ நடமாடும் சேவையானது சாவகச்சேரி கலாச்சார மண்டபத்தில் கடந்த புதன் கிழமை (17) இடம் பெற்றது.

இந் நடமாடும் சேவையில் யாழ் பிரதேசத்தின் கிட்டத் தட்ட 300ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடைந்ததுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆறு ஆயுர்வேத நிபுணர்கள் மற்றும் 25 பயிலுனர்கள் அடங்களாக இச் சேவை இடம் பெற்றது.

இதன் போது மக்களுக்கான இலவச மருந்துகள் வழங்கப்பட்டது. அத்துடன் 52ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் அருண வன்னியாராச்சியவர்களின் அழைப்பை ஏற்று 523ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியனா பிரிகேடியர் டிக்கிரிதிசாநாயக்க , யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்கள் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக ஆயுர்வேத மருத்துவத் திணைக்களத்தின் உயர் விரிவுரையானரான வைத்தியர் எம் எச் எம் ஹாபீல் போனறோர் கலந்து கொண்டனர்.

இதன் போது 523ஆவது படைப் பிரிவினரால் இந் நடமாடும சேவையில் கலந்து கொண்டவர்களுக்கான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டதோடு இவ் வைத்தியக் குழாம் தமது நன்றிகளையும் இராணுவத்தினருக்கு தெரிவித்துள்ளது.

|