தைப்பொங்கள் தினத்தை முன்னிட்டு 65 மற்றும் 66ஆவது படையினரால் சமூக சேவைகள் முன்னெடுப்பு

16th January 2018

கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது மற்றும் 66ஆவது படையினரால் தைப்பொங்கள் தினத்தை முன்னிட்டு இரு சிரமதான சுத்திகரிப்புப் பணிகள் வெல்லன்குளம் அரசாங்க கலவன் பாடசாலையிலும் பூனகிரி அரச வைத்தியசாலை வளாகத்திலும் இடம் பெற்றது.

அந்த வகையில் இப் பாடசாலை அதிபரவர்களினால் 65ஆவது படைக் கட்டளை அதிகாரியவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க 65ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 651ஆவது படைப் பிரிவின் 15ஆவது இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் 100 படையினரின் பங்களிப்போடு இப் பாடசாலை வளாக சுத்திகரிப்பு பணிகள் இடம் பெற்றது.

இத் திட்டமானது 65ஆவது படைத் தலைமையக கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன அவர்களின் ஆசியோடு இடம் பெற்றது.

அதேவேளை 66ஆவது படையினரால் தைப்பொங்கள் தினத்தை முன்னிட்டு (ஜனவரி 14) பூனகிரி அரச வைத்தியசாலை வளாகத்தின் சுத்திகரிப்பு பணிகளும் முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையில் பாரிய எண்ணிக்கையிலான 66ஆவது மற்றும் 661ஆவது படையினரின் பங்களிப்போடு இவ் வைத்தியசாலை வளாக சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த வகையில் 66ஆவது படைக் கட்டளை அதி;காரியான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவெல அவர்களின் ஒருங்கிணைப்போடு இப் பூனகிரி வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளின் அனுமதியோடு நோயார்களுக்கான மதிய உணவுகளும் வழங்கப்பட்டன.

|