தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 66 படைப் பிரிவினரின் தலைமையில் கிரிக்கெட் போட்டிகள்
16th January 2018
வருடாந்த தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையத்தின் கீழ் இயங்கும் 66ஆவது படைப் பிரிவினரின் 2ஆவது (தெண்டர்) இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் போன்றன ஜயபுரம் பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (14) இடம் பெற்றது.
அந்த வகையில் இந் நிகழ்வூகள 66ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவெல அவர்களின் வழிகாட்டலின் கீழ் 663ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சுபாஷன வெலிகல அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டன.
அன்மைனயில் அமைந்துள்ள கிராமப்புரங்களை முன்னிலைப்படுத்தி நான்கு கிரிக் கெட் குழுவினர் போட்டியிட்டதுடன் இறுதிச் சுற்றில் ஜயபுரம் கிரிக்கெட் குழுவினர் வெற்றியயை தழுவிக் கொண்டனர்.
அன்றய தினமே மாலை வேளை ஜயபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் இன்னிசை நிகழ்ச்சிகள் 2ஆவது (தெண்டர்) இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் பேண்ட் வாத்தியக் குழுவினரின் தலைமையில் இடம் பெற்றது.
|