122 ஆவது படைத் தலைமையகத்தின் 7 வது ஆண்டுவிழா

16th January 2018

மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் இயங்கும்122 ஆவது படைத் தலைமையகத்தின் 7 ஆவது ஆண்டு பூர்த்தி விழா (10) ஆம் திகதி புதன் கிழமை சமய ஆசிர்வாத நிகழ்வுடன் இடம்பெற்றது.

ஆண்டு தின விழாவை முன்னிட்டு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு நிகழ்வு இடம்பெற்றது. அதனை தொடர்ந்து அனைத்து படைவீரர்களது பங்களிப்புடன் மதிய உணவு விருந்து நிகழ்வு இடம்பெற்றது.

இப் படைத் தலைமையகத்தில் ஆண்டு விழாவை முன்னிட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் சார்ஜண்ட் விடுதி புதிதாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இராணுவ உயரதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

|