கஜபா படையணியினால் மாங்குள பொது மக்களுக்கு பயிர்கள் வழங்கி வைப்பு
16th January 2018
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 3 ஆவது கஜபா படையணியின் 32 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு சமய நிகழ்வுகளும் கருத்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.
வருடாந்த நிகழ்வையிட்டு முகாம் வளாகத்தினுள் ‘போதி பூஜை’ பௌத்த சமய நிகழ்வுகளும் மற்றும் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கட், கால்பந்து, பெட்மின்டன், கரப்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்றன.
மேலும் 3 ஆவது கஜபா படையணி தலைமையகத்தில் கட்டளை தளபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து மரநடுகை மற்றும் அனைத்து இராணுவத்தினருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வு இடம்பெற்று குழுப் புகைப்படமும் எடுக்கப்பட்டன.
இறுதியில் படையினரை மகிழ்விப்பதற்காக இன்னிசை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது, கிராம மக்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக மாங்குளம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.
கட்டளை அதிகாரி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
|