24ஆவது கெமுனு ஹேவா படையினரால் வயோதிபர்களுக்கான மதிய உணவுவழங்கப்பட்டது.
16th January 2018
கிளிநொச்சிப் பாதுகாப்பு;ப படைத் தலைமையகத்தின் 24ஆவது கெமுனு ஹேவா படையினரால் கிளிநொச்சிப் பிரதேச எஸ் கே முதியோர் இல்லத்திற்கான மதிய உணவுகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவண அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டது.
அந்த வகையில் 24ஆவது கெமுனு ஹேவா படையினரால் சுவையான மதிய உணவு கிளிநொச்சிப் பிரதேச எஸ் கே முதியோர் இல்லத்தின் 40 முதியவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வானது 24ஆவது கெமுனு ஹேவா படையணியின கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் சமிந்த ரத்நாயக்க அவர்களின் தலைமையில் இடம பெற்றது.
அன்றய தினமே 24ஆவது கெமுனு ஹேவா படையினரால் இலவச மருந்துகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டது.
|