கேப்பாப்பிலவு பிரதேச மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு படையினரால் தைப் பொங்கல் உணவுகள் பகிர்ந்தளிப்பு

16th January 2018

முல்லைத்தீவுப் பாதுகாப்புப் படையினரால் தைப்பொங்கல் (14) தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவுப் பிரதேச கேப்பாப்பிலவில் அன்மையில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கான மதிய உணவு வழங்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த வகையில் அன்மையில் இடம் பெற்ற நிகழ்வில் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டு கேப்பாப்பிலவு பிரதேசத்தில் மீள் குடியேற்றப்பட்ட 85குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு படையினரால் மதிய உணவுகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வுகள் முல்லைதீவுப் பாதுகாப்புப் படைத் தளபதியனா மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் வழிகாட்டலில் நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை நோக்காக் கொண்டு இடம் பெற்றது.

|