221ஆவது படைப் பிரிவினரால் பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

15th January 2018

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 22ஆவது படைப் பிரிவின் 221ஆவது படைப் பிரிவினால் மொரவெச பிரதேசத்தின் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் மொரவெவ யாயா - 06 பாடசாலையின் கேட்போர் கூடத்தில் சிவில் அனுசரனையாளர்களின் பங்களிப்போடு கடந்த செவ்வாயக் கிழமை (09) இடம் பெற்றது.

இத் சமூகவியல் திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்தும் நோக்கில் மொரவெவ மகாணத்தில் இடம் பெற்றது.

அந்த வகையில் இந் நலன்புரித் திட்டமானது இலங்கை இராணுவத்தினரால் வரிய குடும்பங்களை மேம்படுத்தி உதவும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது.

இந் நிகழ்விற்கு வருகை தந்த 22ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் உயர் அதிகாரிகளை பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அன்போடு வரவேற்றனர். அத்துடன் மங்கள விளக்கேற்றலுடன் பாடசாலை அதிபர் அவர்களது வரவேற்புரையோடு ஆரம்பமான இந் நிகழ்வூகளில் அனுசரனையாளர்களும் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் மொரவெவ யாயா -06 பாடசாலையின் 175 மாணவர்கள் , மொரவெவ வடக்கு சிங்கள பாடசாலை இமைலாவெவ பாடசாலை , புலிகண்டிகுளடம் பாடசாலை மற்றும் பம்புருகஸ்வெவ பாடசாலை போன்ற பாடசாலைகளுக்கு 2லட்சம் ருபா பெறுமதியிலான பாடசாலை உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இத் திட்டமானது 221ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சுமித் பிரேமலால் அவர்களின் ஆலோசனைக்கமைய இடம் பெற்றது.

அந்த வகையில் மொரவெவ பிரதேசவாசிகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இராணுவத்தினரின் சேவைகளைக் குறித்து பராட்டுத் தெரிவித்துள்ளனர்.

இந் நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான தேநீர் விருந்துபசாரமும் இடம் பெற்றது.

அத்துடன் 221, 222 மற்றும் 224 போன்ற படைப் பிரிவூகளின் கட்டளை அதிகாரிகள் உயர் அதிகாரிகள் ,அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

|