2018ஆம் ஆண்டிற்கான முதல் இராணுவ பயிற்றுவிப்பு மையத்தின் பயிற்ச்சிகள் முடிவு

15th January 2018

சாலியவெவ கலாஓயாப் பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ பயிற்றுவிப்பு மையத்தில் 2018ஆம் ஆண்டில் இராணுவத்திலிருந்து ஓய்வு பெறும் 380 படையினருக்கான 9 நாள் பயிற்ச்சிப் பட்டறையானது கடந்த வெள்ளிக் கிழமை (12) ஆரம்பமானது.

அந்த வகையில் இராணுவ பயிற்றுவிப்பு மையமானது இலங்கை பயிற்றுவிப்பு மையத்தின் அனுமதியைப் பெற்று இராணுவத்தினரிற்காக சிறந்த அங்கீகாரம் பெற்ற தேசிய பயிற்றுவிப்பு தமகமை (NVQ) LEVEL – 3உரிய கல்லிச் சான்றிதழை தமது ஓய்வின் பிற்பாடு பெற்றுக் கொள்ள முடியும்.

இவ் 9 நாள் பயிற்ச்சிப் பட்டறையில் மின்சாவியல் பிளம்பிங் மேசன் மென்பொருள் கையடக்க தொலைபேசி பழுதுபார்த்தல் தொலைக்காட்சி மற்றும் ரேடியோ பழுதுபார்த்தல் இயந்திர பழுதுபார்த்தல் வெல்டிங் அலுமினிய வேலை மற்றும் பூச்சுப் பூசுதல் போன்ற பயிற்ச்சிப் பட்டறைகள் ஜனவரி 4-12ஆம் திகதி வரை 2017ஆம் ஆண்டு இராணுவ பயிற்றுவிப்பு மையத்தின் கெமடாண்ட் பிரிகேடியர் ரண்துல ஹத்நாகொட அவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம் பெற்றது.

அத்துடன் இப் பயிற்ச்சிகள் சிவில் தொடர்பாடல் மற்றும் சமூகவியல் போன்றன தொடர்பான விடயங்கள் தொடர்பாக இடம் பெற்றது.

இந் நிகழ்வில் இராணுவ பயிற்றுவிப்பு மையத்தின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் சஷிக பெரேரா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

|