அபிமன்சல – 2 ஐச் சேர்ந்த படை வீரருக்கு திருமண ஏற்பாட்டு

13th January 2018

கம்புறுப்பிட்டியப் பிரதேசத்தில் அமைந்துள்ள அபிமன்சல – 2 ஐ சேர்ந்த மற்றுமோர் அங்கவீனமுற்ற படை வீரரின் திருமண ஏற்பாடுகள் டிக்வெல்ல பிரியங்க வரவேற்பு மண்டபத்தில் கடந்த 2017.12.07ஆம் திகதியன்று இவ் அபிமன்சல – 2 இன் கொமடாண்ட் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்றது.

அந்த வகையில் கம்பஹா பிரதேசத்தில் உள்ள சியநேவே அபி எனும் திட்டத்தின் அனுசரனையில் கொமடாண்ட் அவர்களின் ஒருங்கிணைப்பில் 2004ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி மனிதாபிமான நடவடிக்கைகளின் போது அடம்பன் பிரதேசத்தில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு தமது வலது காலை இழந்து அங்கவீனமுற்ற இராணுவ வீரரான கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த சார்ஜன்ட் எல் டீ டீ புஷ்பகுமார என்பவரிற்கு இத் திட்டத்தின் மூலம் திருமணம் நடைபெற்றது.

அந்த வகையில் சக்கர நாற்காலிக்கு முடக்கப்பட்ட இவ் இராணுவ வீரரான சார்ஜன்ட் புஷ்பகுமார இவ் அபிமன்சல – 2ற்கு வருகை வருகை நந்த டிக்வெவ குந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த கணேஷா சன்சலா குமாரி கம்ஹேவா எனும் பெண்மணியை காதல் வயப்பட்டு மணந்து கொண்டார்.

இத் திருமண நிகழ்வுகள் சியநேவே அபி எனும் திட்டத்தின் திரு சமன் ஜயலத் அவர்களின் அனுசரனையோடு அபிமன்சல – 2 சேர்ந்தவர்களின் பங்களிப்போடு இடம் பெற்றது.

|