இராணுவத்தினரால் புதிதாக நிறுவப்பட்ட சக்கர சமநிலை மையம்

11th January 2018

முல்லைத் தீவுப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 6ஆவது இலங்கை மின்சார பொறிமுறை இயந்திரப் படைப் பிரிவினரால் புதிதாக நிறுவப்பட்ட சக்கர சமநிலை மையத்தின் திறப்பு விழாவானது இலங்கை இலங்கை மின்சார பொறிமுறை எந்திரிகள் படைப் பிரிவின் கேர்ணல் கெமடான்ட் மற்றும் இப் படையணியின் பணிப்பாளரான பிரிகேடியர் துமிந்த சிறிரங்க அவர்களது தலைமையில் கடந்த 08 ஆம் திகதி ஜனவரி 2018அன்று இடம் பெற்றது.

அந்த வகையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பிரதேசங்களை உள்ளடங்கிய பாதுகாப்புப் படையினரின் வாகனங்களின் சக்கர சமநிலைச் சீரமைப்பை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் இச் சேவைகளை அன்றய தினம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பிரதேசங்களின் பாதுகாப்புப் படையினர் வவுணியா மற்றும் அனுராதபுர பிரதேசங்களைச் சேர்ந்த தனியார் துறைகளின் மூலம் பெற்றுக் கொண்டனர்.

இப் புதிதாக நிறுவப்பட்ட மையத்தின் உபகரணப் பொருட்களை கொள்வனவூ செய்வதற்கான முதலீட்டை யுத்த உபகரண மாஸ்டர் ஜெனரல் மற்றும் மின்சார பொறிமுறைஇயந்திரப் படைப் பணிப்பகம் போன்றன வழங்கி வைத்தன.

|