ஐக்கிய ராச்சியத்தின் இலங்கைக்கான நிபுணக்குழுப் பிரதானிகள் யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியை சந்திப்பு

9th January 2018

ஐக்கிய ராச்சியத்தின் இலங்கைக்கான நிபுணக்குழுப் பிரதானிகள் பலாலியில் அமைந்துள்ள யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டதுடன் இப் படைத் தலைiயைக தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

ஐக்கிய ராச்சியத்தின் இலங்கைக்கான நிபுணக்குழுப் பிரதானியான கௌரவமிக்க ரணில் ஜயவர்தன மற்றும் பாதுகாப்புப் படைத் தளபதியவர்களிடையே இடம் பெற்ற கலந்துரையாடலின் போது நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஒருங்கிணைப்பையும் கட்டியெழுப்பும் நோக்கில் இராணுவத்தினரின் செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்கள் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தால் முன்னெடுக்கப்படுகின்ற மனிதாபிமான செயற் திட்டங்கள் தொடர்பான விளக்கங்கள் எடுத்துக்காட்டப்பட்டதோடு இத் தளபதியவர்களால் இப் பிரதானியர்களுக்கான நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

|