பொலன்னறுவையில் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் நடை பவனி
9th January 2018
ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய ‘பொலன்னறுவை எழுச்சி’ எனும் கருத்திட்டத்தின் கீழ் ‘ரஜரட நவோதய’ எனும் தொணிப்பொருளின் கீழ் 250 முப்படையினரது பங்களிப்புடன் ‘2018 – PMO Walk’ நடைபவணி பொலன்னறுவையில் (4) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றது.
பொலன்னறுவை மாவட்ட செயலாளர் திரு. ரஞ்சித் ஆரியரத்ன தலைமையிலான 5 கி.மீ தூரம் இந்த நடைபவணி இடம்பெற்றது. இதில் ‘பொலன்னறுவை எழுச்சி’ திட்டத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சந்தன விஜேசுந்தர, அரச அதிகாரிகள் மற்றும் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
ஒரு பொது இலக்கை அடைவதற்காக அரசு அதிகாரிகள் மற்றும் அரச சேவையாளர்களுக்கு நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
.இந்த நடை பவனிக்கு பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, அரசாங்க அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
|