படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற பெட்மின்டன் போட்டிகள்
8th January 2018
இராணுவ படையணிகளுக்கு இடையிலான 2018 ஆம் ஆண்டிற்கான பெட்மின்டன் போட்டிகள் (08) ஆம் திகதி பனாகொட உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இராணுவ பெட்மின்டன் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் டீ.டி கமகே அவர்களது அழைப்பை ஏற்று இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்கள் வருகை தந்தார்.
இந்த இறுதி சுற்று போட்டியில் இராணுவ இலேசாயுத காலாட் டையணி மற்றும் இராணுவ போர் கருவி படையணி பங்கு பற்றியது. இப்போட்டியின் போது இலேசாயுத காலாட் படையணி வெற்றியை சுவிகரித்து கொண்டது.
மேலும் இராணுவ மகளீர் படையணிகளுக்கு இடையிலான இறுதி சுற்றுப் போட்டியில் இராணுவ மகளீர் சிறப்பணி மற்றும் இராணுவ பொலிஸ் படையணி பங்கு பற்றியது. இப்போட்டியின் போது இராணுவ மகளீர் சிறப்பணி வெற்றியை சுவிகரித்து கொண்டது.
11 இராணுவ படையணியின் பங்களிப்புடன் இந்த நிகழ்வுகள் ஜனவாரி மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதி வரையான ஆறு நாட்கள் இந்த போட்டிகள் பனாகொட உள்ளரக விளையாட்டரங்கில் இடம்பெற்றன.
|