இராணுவத்தினரால் நூலகங்களுக்கான புத்தகங்கள் வழங்கி வைப்பு
8th January 2018
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 23 மற்றும் 233 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தின் வெலிகந்த மற்றும் வாகரை பிரதேசங்களில் உள்ள பாடசாலை நூலகங்களுக்கு புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இந்த புத்தகங்கள் கலன வக்சிதா நிறுவனத்தின் அனுசரனையில் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நூலகங்களுக்கு வழங்கப்பட்டன.
வெலிகந்த பிரதேசத்தின் மதுரங்கள மகா வித்தியாலயம் > குருலுபெத்த வித்தியாலயம்> சிங்கபுர வித்தியாலயம்மற்றும் மகிந்த வித்தியாலயம் போன்ற பாடசாலைகளுக்கு ஒரு லட்சம் பெறுமதிமிக்க புத்தகங்கள் நூலகங்களுக்கு வழங்கப்பட்டன.
இப் புத்தகங்களில் கதை புத்தகங்கள்> விசித்திரக் கதைகள்> நாவல்கள் போன்ற புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டி இருந்தன.
மேலும் பாலச்சென்னை தமிழ் பள்ளி மற்றும் கதிர்வேலி பிரதேசத்தில் உள்ள பெண்கள் அனாதை இல்லத்திற்கு புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இப் புத்தகங்கள்வழங்கும் நிகழ்வில் இராணிவ அதிகாரிகள்> இராணுவத்தினர்> மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
|