கிளிநொச்சி பாதுகாப்பு படையினர்கள் சிறுவர் விடுதிக்கு உதவிகள்

5th January 2018

கிளிநொச்சியில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 16 ஆவது தொண்டர் இலேசாயுத காலாட் படையணியின் பூரண ஒத்துழைப்புடன் இந்த சிறுவர் விடுதியில் உள்ள சிறுவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு பரிசு பொதிகளும் வழங்கப்பட்டன.

57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, 571 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி கேர்ணல் அஜித் கொலம்பதந்திரி அவர்களது தலைமையில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் வருகை தந்து சிறுவர்களுக்கு பரிசு பொதிகளையும் வழங்கினார்.

|