வன்னி படையினரால் வவுனியா சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடை
4th January 2018
கொழும்பு ஹேமாஸ் மன்றத்தின் அனுசரனையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமையில் வவுனியாவிலுள்ள பொகஸ்வெவ மற்றும் செல்லலிஹினிகம கிராமத்தில் வசிக்கும் வறிய குடும்பத்தை சேர்ந்த சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது தலைமையில் 19 ஆவது தொண்டர் கஜபா படையணியின் பூரண ஒத்துழைப்புடன் பொகஸ்வெவ வித்தியாலய வளாகத்தினுள் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
ஹேமாஸ் அவுட்ரிச் அமைப்பின் 6 ஆவது ஆண்டு பூர்த்தி நிறைவையிட்டு இந்த நன்கொடை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டன.
இந்த நிகழ்விற்கு வன்னி பாதுகாப்பு படைத் தளபதிமேஜர் ஜெனரல் குமுது பெரேரா,ஹேமாஸ் அவுட்ரிச் அமைப்பின் பணிப்பாளர் திருமதி சிரோமி மசகோரல, 563 ஆவது படைத் தளபதி ,பொகஸ்வெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
|