ஓய்வு பெறும் இராணுவ அங்கத்தவர்களுக்கு தொழில் தகைமை சான்றிதழ்கள்

3rd January 2018

இராணுவத்திலிருந்து ஓய்வு பெறும் நபர்களுக்கு பல்வேறுபட்ட தொழில் பயிற்சிகள் கலாஒய, சாலியவெவ இராணுவ பயிற்சி நிலையத்தில் நடாத்தப்படுகின்றது.

இராணுவத்திலிருந்து ஓய்வு பெறும் நபர்கள் 122 பேர் மற்றும் சிவில் நபர்கள் 20 பேரும் (NVQ) பயிற்சி நெறிகளை மேற்கொண்டனர். இந்த பயிற்சி நிறைவு விழா (02) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை பயிற்சி மத்திய நிலைய கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இந்த பயிற்சி நெறி சாதாரண பொது தராதர பரீடசையில் சித்தியடைந்த நபர்களை உள்ளடக்கி நடாத்தப்பட்டது.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் இராணுவ தொழில் பயிற்சி மத்திய நிலையத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் ரந்துல ஹத்னாஹொட, இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் அநுராதபுர மாவட்ட பொறுப்பதிகாரி சீ.பீ விஜேதாஸ மற்றும் இராணுவ அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

|