கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற செயலமர்வு

3rd January 2018

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இராணுவ அதிகாரிகளுக்கு ‘ தலைமைத்துவம் மற்றும் அபவிருத்தி தொடர்பான செயலமர்வு 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த செயலமர்வு இராணுவ தலைமையக பயிற்சி பணியகத்தின் ஆலோசனைக்கமைய கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் இராணுவ அதிகாரிகளுக்கு இடம்பெற்றது.

இந்த செயலமர்வில் இராணுவ கட்டளை அதிகாரிகள், இரண்டாம் கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தனியார் வணிக துறையில் மூத்த விரிவுரையாளரான ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் வசந்த பமுனுவ அவர்கள் இந்த செயலமர்வில் விரிவுரைகளை ஆற்றினார்.

|