படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற எல்லை போட்டிகள்

3rd January 2018

இராணுவ படையணிகளுக்கு இடையிலான எல்லை போட்டிகள் கடந்த சனிக்கிழமை (30) ஆம் திகதி அநுராதபுரத்தில் அமைந்துள்ள சாலியபுர கஜபா படையணி தலைமையக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டிகள் இராணுவ ஆண் அணிகள் மற்றும் மகளீர் படையணிகளுக்கு இடையில் இடம்பெற்றன.

இந்த இறுதி சுற்று போட்டிகளில் இலங்கை இராணுவ ஆண் அணிகளில் இருந்து இலங்கை இராணுவ படைக் கலச் சிறப்பணி வெற்றியை பெற்றுக்கொண்டது. அதே போல் இராணுவ மகளிர் படையணியினருக்கு இடம்பெற்ற இறுதி சுற்று போட்டியில் 6 ஆவது.

9 தொண்டர் மகளீர் படையணி வெற்றியை பெற்று கொண்டது.

இறுதி சுற்றுப் போட்டி விஜயபாகு காலாட் படையணி மற்றும் படைக்கலச் சிறப்பணிகளுக்கு இடையில் இடம்பெற்று இந்த போட்டியில் படைக்கலச் சிறப்பணி வெற்றயை பெற்றுக்கொண்டது.

இப்போட்டிகள் கடந்த மாதம் டிசம்பர் 27 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இதில் 15 இராணுவ படையணிகள் கலந்துகொண்டன.

ஆண்கள் பிரிவில் சிறந்த விளையாட்டு வீரர்களாக படைக்கலச் சிறப்பணியைச் சேர்ந்த கோப்ரல் டப்ளயூ.எம்.எஸ்.சீ பீரிஸ் , லான்ஸ் கோப்ரல் ஏ.டீ. குமார மற்றும் விஜயபாகு காலாட் படையணியின் லான்ஸ் கோப்ரல் என்.எச். நலின் சிந்தகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இராணுவ மகளீர் படையணியிலிருந்து சிறந்த விளையாட்டு வீராங்கனைகளாக எம்.டி. மனதுங்க , எம்.என்.எல் தமயந்தி மற்றும் கோப்ரல் என். ஜயவர்தன அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ எல்லை சங்கத்தின் தலைவர் மற்றும் 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாந்து அவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

|