புதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு 682 ஆவது படைத் தலைமையகத்தினால் உதவிகள்

31st December 2017

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகம் மற்றும் ,68 ஆவது படைப்பிரிவின் கீழ் இயங்கும்682 ஆவதுபடைப்பிரிவின் தலைமையில் முல்லைத்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள வெனவில் சிறி முருகானந்த மஹா வித்தியாலய மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

150 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை இலங்கை ஸ்கொட் அசோசியேனஸ்கெய்ட்ஸ் மகளீர் அமைப்பின் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு, 682 படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் டீ. ஜி ஹேவகே அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போது பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில் இப்பிரதேச கிராம வாசிகள்,பாடசாலை மாணவர்கள் ,இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

|