இலங்கை இராணுவ முன்னோடி படையணியினால் பௌத்த ‘புதுமெதுரு’ திறந்துவைப்பு

31st December 2017

அல்பிடிய, பிடிகலவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ முன்னேடி படையணி மத்திய நிலையத்தில்பௌத்த ‘புதுமெதுரு’(18) ஆம் திகதி திங்கட் கிழமை திறந்துவைக்கப்பட்டது.

தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வரும் ஓய்வு பெற்ற உயரதிகாரியான கேர்ணல் தீபால் தென்னகோன் அவர்களது அன்பளிப்பின் மூலம் இந்த பௌத்த ‘புதுமெதுரு’ நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது இராணுவ முன்னோடி படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் டீ.ஏ.எஸ் கொழும்பாரச்சி அவர்களது அழைப்பையேற்று இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தின் உயரதிகாரியான பிரிகேடியர் டி.டி.பி சில்வா அவர்களினால் ‘புதுமெதுரு திறந்து வைக்கப்பட்டது.

இராணுவ முன்னோடி படையணியின் பிரதி கட்டளை அதிகாரி மேஜர் டப்ள்யூ.டீ.ஆர் விக்ரமஆரச்சி மற்றும் படை வீரர்களும் இணைந்திருந்தனர்.

|