651 ஆவது படைத் தலைமையகத்தினால் சிவிலியனின்இறுதி மரணச்சடங்குகளிற்கு உதவி
29th December 2017
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் வேளாங்குளம் மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள கணேசபுரத்தில் வசிக்கும் கோவிந்தசாமி அவர்களது மரண இறுதி சடங்குகளுக்கான உதவிகள் படைத் தலைமையகத்தின் உதவிகளுடன் இடம்பெற்றன.
65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன அவர்களது எண்ணக் கருவிற்கமைய, 651 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் ரஞ்சித் அபேசிங்க அவர்களது தலைமையில் இந்த மரணச்சடங்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்து வந்த இந்த நபரது மரண சடங்குகள் இராணுவத்தினரது பூரண ஒத்துழைப்புடன் இடம்பெற்றது. மேலும் இந்த மரண சடங்கிற்கு வருகை தந்த 60 பேருக்கு உணவு வசதிகளும் இராணுவத்தினரால் வழங்கப்பட்டது.
இந்த பணிகள் 15 ஆவது சிங்க படையணியினால் மேற்கொள்ளப்பட்டது.
|