58ஆவது படைபிரிவுக்கு புதிய கட்டளை தளபதிபதவியேற்பு

28th December 2017

காலி பூசாவில் அமைந்திருக்கும் 58ஆவது படைபிரிவிற்கு 11 ஆவது கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா கடந்த வியாழக்கிழமை(21) ஆம் திகதி படைத் தலைமையக அலுவலகத்தில்தமது பதவி பொறுப்பேற்றார்.

இந்த புதிய கட்டளை தளபதிக்கு இப்படைபிரிவின் இராணுவத்தினரால் வரவேற்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இப்படைப்பரிவினரால் இராணுவ மரியாதைஅணிவகுப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து பௌத்த மத செத் பிரித் பூஜையிலும் கலந்து கொண்டு ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்ட அவர்நியமண அதிகாரிகள் ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

பின்னர் படைத் தலைமையக வளாகத்தில் மரக் கன்று நடும் நிகழ்வுக்கு பின் அனைத்து படையினருடன் கலந்துரையாடிய அவர் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.

|