57ஆவது படைப்பிரிவினரால் சிரமதானப் பணிகள்
28th December 2017
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைப்பிரிவினரால் டிசம்பர் மாதம் 23 அம் திகதி பரந்தன் புனித அந்தோனியார் தேவாலய வளாகத்தில் சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.
கிரிஸ்தவ மத வழிபாடுகளில் நிமித்தம் 57ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்த்தன அவர்களின் கருத்தின்படி 573ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேர்ணல் ஜானக ரணசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இப் பணிகளில் 573ஆவது படைப்பிரிவு>1ஆவது இராணுவ சிங்க படையணி மற்றும் 61ஆவது இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியுடன் 87 பேர்கள் கலந்து கொண்டார்கள்.
இராணுவத்தினரால் வழங்கப்பட்ட இந்த சேவைக்காக பரந்தன் புனித அந்தோனியார் தேவாலய அருட்தந்தை அவர்கள் தமது நன்றியை தெரிவித்தார்.
|