65 ஆவது படைப் பிரிவின் 9 ஆவது ஆண்டு பூர்த்தி விழா
28th December 2017
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன அவர்களது வழிக்காட்டலின் கீழ் இந்த ஆண்டு பூர்த்தி விழா (15) ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முதல் அங்கமாக இராணுவ கீதம் இசைத்து நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து படைத் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து தேநீர் விருந்துபசார நிகழ்வு தலைமையகத்தில் இடம்பெற்றன.
மேலும் படைத் தலைமையக வளாகத்தினுள் 65 ஆவது படைத் தளபதியினால் பயிற்சி படை விடுதி முகாம் ஒன்றிற்கு அடிக்கல் நடும் நிகழ்வும் அன்றைய தினம் இடம்பெற்றது.
அச்சமயத்தில் படைத் தலைமையக அதிகாரிகள் , கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பௌத்த மத தேரர்கள் 50 பேருக்கு தான நிகழ்வும் இடம்பெற்றன.
இந்த படைப் பிரிவு 2011 ஆம் ஆண்டு மல்லாவி பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
|