இராணுவத்தினரால் இரத்த தான நிகழ்வு
28th December 2017
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 55ஆவது படைப்பிரிவின் 21ஆவது ஆண்டு புர்த்தியை முன்னிட்டு இப்படைப்பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஜயந்த குணரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் நிகழ்ச்சி திட்டம் டிசம்பர் 15 தொடக்கம் 23ஆம் திகதி வரை இடம்பெற்றது.
யாழ் போதனை வைத்தியசாலை இரத்த வங்கிக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கடந்த (15) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இரத்த தான நிகழ்வு இராணுவத்தினரது பங்களிப்புடன் நடத்தப்பட்டது. அத்துடன் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களை நினைவு படுத்தி பௌத்தமத சமய நிகழ்வுகள் இடம்பெற்றது டிசம்பர் மாதம் (20) ஆம் திகதி புதன்கிழமை படைத் தலைமையக வளாகத்தினுள் நினைவு தினத்தை முன்னிட்டு இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் படைத்தளபதிக்கு வழங்கப்பட்டது. பின்பு தலைமையக வளாகத்தினுள் விருந்தோம்பல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
அத்துடன் அன்றைய தினம் இராணுவ இன்னிசை குழுவினரது பங்களிப்புடன் இன்னிசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
|