அனைத்து வசதிகளுடன் கூடிய இராணுவ அதிகாரிகளின் உணவு சாலை திறந்து வைப்பு
28th December 2017
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும 62ஆவது படைத் பிரிவுகளின் 621ஆவது படைப்பிரிவிற்கு விஜயத்தினை மேற்கொண்ட வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் ஒரு சுப நேரத்தில் இப் புதிய உணவு சாலையை திறந்துவைத்தார்.
இந் திட்டமானது 621ஆவது படைத் பிரிவின் அதிகாரியான கேர்ணல் கல்பா சஞ்ஞீவ அவர்களின் ஆலோசனைக்கு அமைய இந்த கட்டிடம் இயற்கை சூழல்களுடன் விசாலமான உணவுசாலை>அதிகாரிகள் தங்கும் அறை> தொலைகாட்;சி அறை மற்றும் பல அறைகளும் பல இட வசதிகளுடன் ஒன்றரை மாடி கட்டிடமாக மறுசீரமைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்காக படைப்பிரிவுகளின் அதிகாரிகள் எல்லாம் 621ஆவது படைத் பிரிவில் ஒரு மாலை நேரத்தில் ஒன்று கூடினர்.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் மற்ற அதிகாரிகளுடன் குழு புகைப்படபிடிப்பில் கலந்து கொண்டு> சிறப்பு விருந்தினர்களுக்கான புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.
இந் நிகழ்வில் 62 ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சஞ்சய வனிகசூரிய அவர்களும் அதிகாரிகளும்> கட்டளை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
|