குழந்தைகள் இல்லத்தில் நத்தார் பண்டிகையை கொண்டாடிய கெமுனு ஹேவா படையினர்
27th December 2017
குருவிட்டயில் அமைந்துள்ள கெமுனு ஹேவா படையணியுடன் இணைந்து புனித பேதுரு; தேவாலயத்தினர் மற்றும் புனித பவுல் தேவாலயம்>இணைந்து ரத்னபுர புனித வின்டி குழந்தைகள் இல்லத்தில் நத்தார் பண்டிகையை இக் குழந்தைகளோடு கடந்த (23)ஆம் திகதி கொண்டாடினார்கள்.
புனித பேதுரு தேவாலயம் மற்றும் புனித பவுல் தேவாலயத்தின் அருட்தந்தையான பூஜ்ய சுரங்க மற்றும் கிஸ்து தேவாலயத்தின் அருட்சகோதரிகளின் பிரார்த்தனை பின் நத்தார் சமய வழிபாடுகள்நடத்தப்பட்டது.
இந்த நத்தார் கரோல் நிகழ்வில் 35க்கும் மேற்பட்ட குழந்தைகள்; நத்தார் கீதங்களை பாடுவதில் பங்குபற்றினர். இந்த நிகழ்வின் இறுதியில் நத்தார் நிகழ்வில் கலந்த கொண்ட அனைவருக்கும்> வருகை தந்த குழந்தைகள்> சிறுவர்களுக்கும் நத்தார் தாத்தாவினால் பரிசும் விழையாட்டு பொருட்க வழங்கியதுடன் இவர்களுடன் நத்தார் பண்டிகையையும் கொண்டாடினர் இதனைத் தொடர்ந்து கெமுனு ஹேவா படையணியினரால் சுவையான விருந்தும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி>படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி>மற்றும் அதிகாரிகளும் படையினரும்பலரும் கலந்து கொண்டார்கள்.
|